பானிபூரி பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்... உயிரை பறிக்கும் கேன்சர் வருமாம்
இன்று பெரும்பாலான நபர்கள் வாங்கி சாப்பிடும் பானிபூரி புற்றுநோய் ஏற்படுத்துகின்றது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பானி பூரி
பானி பூரி என்ற பெயரை கேட்டாலே இன்று பலரின் நாவில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த உணவிற்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்தியாவில் பல இடங்களில் தெருவோரங்களில் விற்கப்படும் இந்த உணவினை சாப்பிட்ட பின்பு, அதில் ஊற்றப்படும் தண்ணீரை மீண்டும் கேட்டு வாங்கி அருந்தம் பழக்கம் அதிகமாக உள்ளது.
ஆனால் இவை புற்று போன்ற பயங்கரமான நோயை உண்டாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் ஆய்வு ஒன்றினை நடத்திய போது, எடுக்கப்பட்ட பானி பூரி மாதிரிகளில் 22 சதவீதம் பாதுகாப்பு தர நிலையில் தோல்வி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆய்வு கூறுவது என்ன?
கர்நாடகாவில் இருந்து எடுக்கப்பட்ட பானி பூரி மாதிரிகளில் 41 செயற்கை நிறங்களும், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளும் இருப்பதாகவும், 18 மாதிரிகளின் தரம் மிகவும் மோசமானதாகவும், சாப்பிடுவதற்கே தகுதியற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கண்டறியப்பட்ட மாதிரிகளில், Brilliant Blue, Sunset Yellow, Tartrazine போன்ற ரசாயனங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளன. அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படும்.
பானிபூரி தண்ணீர் கலப்படமா?
புளி தண்ணீர் வெளிர் நிறத்தில் இருக்கும். அதே சமயம் கொத்தமல்லி மற்றும் புதினா தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால், இதில் அமிலம் கலந்திருந்தால், உடனே வயிற்று வலி ஏற்படும் மற்றும் தண்ணீர் கசப்பாகவும் இருக்கும்.
கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் போன்று உணவுகளில் பயன்படுத்தப்படும் உணவு நிறத்தை கர்நாடகா அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |