Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன்
நிலநடுக்கம் ஏற்பட்டு வீடு குலுங்கிய நிலையில், சிறுவன் ஒருவன் தனது தம்பியை தரதரவென இழுத்துச் சென்ற காட்சி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
இன்றைய காலத்தில் இயற்கையின் பேரழிவுகள் அதிகமாக அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
சில தினத்திற்கு முன்பு அமெரிக்கா கலிபோர்னியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் இயற்கைக்கு எதிராக செய்யும் செயல்களால், தற்போது கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் இயற்கை தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது.
இங்கு காணொளி ஒன்றில் வீட்டில் மூன்று குழந்தைகள் ஒரு ஷோபா செட்டில் அமர்ந்து மொபைல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தருணத்தில் வீடு திடீரென நிலநடுக்கத்தால் குலுங்கியுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட சிறுவன் வெளியே செல்வதற்கு தயாரான நிலையில், வீட்டிற்குள் இருந்த தாயும் வந்துள்ளார்.
பின்பு தனது குட்டி தம்பி கீழே இருந்த தனது செருப்பை போடுவதற்கு முயன்ற போது, தம்பியின் உயிரைக் காப்பாற்ற அண்ணன் அவனது ஆடையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் செல்கின்றார்.
நெஞ்சை பதற வைக்கும் நிலநடுக்க காட்சியாக இருந்தாலும், இதிலும் அந்த சிறுவனின் பாசத்தை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் மட்டுமே வருகின்றது.
1 நில நடுக்கம் ஏற்படும் போது தம்பியை இழுத்து கொண்டு ஓடும் அண்ணன் 👌
— ஆதிரன் 🇮🇳 ⚫🔴 (@Aathiraj8586) April 10, 2025
2 ஆளுக்கொரு மொபைல் கொடுத்து வெச்சிருக்காங்க, அதற்கு பதில் டிவி பார்க்க சொல்லலாம்.🤦 pic.twitter.com/ofZohFXMM5
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |