மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்... - குலுங்கிய கட்டிடங்கள்.... - மக்கள் அதிர்ச்சி..!
மத்திய பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
குவாலியரிலிருந்து தென்கிழக்கே 28 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திலிருந்து உலக நடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
An earthquake with a magnitude of 4.0 on the Richter Scale hit 28km SE of Gwalior, Madhya Pradesh today at 10:31 am IST: National Centre for Seismology pic.twitter.com/FvXdeqwrZl
— ANI (@ANI) March 24, 2023