ஹைதி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்... 304 பேர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதுவரை 304 பேர் பலியாகிவிட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Cuban doctors in Haiti helping with the situation provoked by earthquake. pic.twitter.com/oXUH28lA4S
— EmbaCuba Suriname (@EmbaCuba_Surina) August 14, 2021
Haiti was hit with a 7.2 magnitude earthquake today.
— Philip DeFranco ?? (@PhillyD) August 14, 2021
The AP is reporting at least 227 people have died. pic.twitter.com/HVGD2TEcfo