பூமியில் ஒரு உயிரினம் இல்லாமல் மொத்தமாக அழியப்போகும் எச்சரிக்கை!
பூமியில் மனிதன் மட்டுமல்ல ஒரு உயிரினம் கூட இல்லாமல் அழியப்போவதாக ஆராய்ச்சியாளார்களான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம்
இன்னும் சில மில்லியன் வருடங்களில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது.
இவை அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும். என்பதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் நாம் கார்பனை வெளியேற்றுவதால் உலகத்தின் அழிவு விரைவில் நடக்கும் வாய்ப்பும் உள்ளது.
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்போது இருப்பதை விட வெப்பம் தாங்காமல் எரிமலைகள் எல்லாம் வெடித்து சிதறி பூமி எரிமலையால் மூடப்படும் எனவும் கூறுகின்றனர்.
இதனால் பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |