ஆகஸ்ட் 5 வேகமாக சுழன்ற பூமி- விஞ்ஞானிகள் அச்சம்
ஆகஸ்ட் 5, 2025ம் ஆண்டு பூமியின் சுழற்சி வேகத்தில் அதாவது 1.25 மில்லிவினாடிகள் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வேறுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் இதுகுறித்து கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாக அன்றைய நாள் சற்று குறைவானதாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஆகஸ்ட் 5 மட்டுமின்றி ஜூலை 9 மற்றும் ஜூலை 22 ஆகிய நாட்களிலும் மாற்றம் இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.
பூமியின் வேகத்தில் மாறுபாடு ஏன்?
பூமி தனது அச்சில் ஒரு முழு சுழற்சியை முடிக்க 24 மணிநேரத்தை அல்லது 86,400 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.
இதில் 0.001 மில்லிவினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
சந்திரனின் சுற்றுப்பாதை பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், பூமியின் பூமத்திய ரேகைக்கு வடக்கு அல்லது தெற்கே சந்திரனின் நிலை வெகு தொலைவில் இருக்கும் போது இந்த மாற்றங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.
நிலநடுக்கம், எரிமலைகள், நிலத்துக்கு அடியில் மாற்றங்கள் போன்ற காரணங்களினாலும் பூமியின் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும்.
குறிப்பாக 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பூமியின் சுழற்சி அதிகரித்து அன்றைய நாளுக்கான நீளம் 1.8 மைக்ரோவினாடிகள் குறைந்தது.
எப்போதெல்லாம் நடந்தது?
2025ம் ஆண்டு கோடையில் மூன்று நாட்கள் இது நிகழ்ந்தன.
ஜூலை 9: நாள் 1.23 மில்லிவினாடிகளால் குறைக்கப்பட்டது
ஜூலை 22: நாள் 1.36 மில்லி வினாடிகளால் குறைக்கப்பட்டது
ஆகஸ்ட் 5: நாள் 1.25 மில்லி வினாடிகளால் குறைக்கப்பட்டது
