குழந்தைகள பாதிக்கும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் இப்படித்தான் இருக்குமா?
சமீப காலமாக குழந்தைகளை பாதித்து வரும் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பது மிகவும் முக்கியமானது.
புற்று நோய்
தற்போது ஆசிய நாடுகளில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 4,00,000 குழந்தைகள் அதுவும் 14 வயதிற்கு உட்பபட்வர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதை உலக சுகாதார நிபுணர் கூறியுள்ளார்.
அதிலும் ரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய், லிம்போமா, நரம்புத்திசு புற்றுநோய், வில்ம்ஸ் கட்டிகள் போன்றவை குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
சரியான நேரத்தில் நோயை கண்டறியாமை, சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிடுவது, முறையான சிகிச்சை இல்லாமை, ஆரம்பத்திலேயே தேவையான பரிசோதனையை எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் மட்டுமே புற்றுநோயால் பாதித்த குழந்தைகள் இறக்க நேரிடுகின்றன.
இதன் ஆரம்பகால அறிகுறியாக காய்ச்சல் வந்தால் அது ஒரு வாரத்திற்கு மேல் அப்படியே இருத்தல். திடீரென்று காயம் வருதல் ரத்த கசிவு வருதல். பசியின்மை, உடல் எடை குறைதல், மாதக் கணக்கில் சோர்வாக இருப்பது. காலை நேரத்தில் கடுமையான தலைவலி இருத்தல் வாந்தி வருதல்.
எலும்பு கூடுதலாக அசையும் போது தாங்க முடியாத வலி. இது இரவில் உறக்கத்தையும் கெடுக்கும். பார்வை குறைபாடு. எதிரில் உள்ளவர்கள் வெள்ளை நிறமாக தெரிவது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை உடனடியாக வைத்தியரிடம் கொண்டு செல்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |