இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ இளம் வயதில் மாரடைப்பு வரப்போகுதுன்னு அர்த்தம்
பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளுள் இதயம் பிரதான இடத்தை வகிக்கின்றது.
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் மாரடைப்பு அபாயம் ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.
அதிகரித்த வேலைப்பளு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, முறையான உடற்பயிற்ச்சி இல்லாமை, மன அழுத்தம் மற்றும் அளவுக்கு அதிகமான உடற்பயிற்ச்சி போன்ற பல்வேறு காரணங்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.
இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கும் நிலை ஏற்படுகின்றது.
மாரடைப்பு தற்காலத்தில் மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான விளக்கம் மற்றும் உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்து பெரும்பாலானவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
மார்பில் வலி ஏற்பட்டாலோ அது மாரடைப்பு தான் என்று அனேகமானோர் நினைத்துக்கொள்கின்றனர். பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பது தொடர்பில் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது அவசியம்.
மாரடைப்பு வயதானவர்களுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை. இளம் வயதினருக்கும் வரக்கூடும்.
மாரடைப்பு ஏற்படப்போகின்றது என்றால் குறைந்தது ஒரு வாரத்துக்கு முதலே உடலில் குறிப்பிட்ட சில முக்கிய அறிகுறிகள் தோன்றும் இதனை அலட்சியப்படுத்துவது உயிராபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் தோன்றும் முக்கிய அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
மாரடைபின் முக்கிய அறிகுறிகள்
காரணமின்றி வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வியர்த்தால், எந்த ஒரு வேலையையும் செய்யாமல் அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
மாரடைப்பு வரப்போகிறது என்றால் திடீரென்று நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு பகுதியில் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
இப்படியான அசௌகரியத்தை இரவு நேரத்தில் காரணமின்றி அனுபவிக்கின்றீர்கள் என்றால் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. இது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
இளம் வயது பெண்கள் காரணமின்றி கழுத்து மற்றும் தோள்பட்டையில் அதிகமான வலியை உணர்ந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் இது மாரடைப்பின் எச்சரிக்கை மணி போன்றது.
இளம் பெண்களுக்கு மாரடைப்பின் போது நெஞ்சு வலியை விட, கழுத்து, தாடை, தோள்பட்டை போன்ற பகுதிகளிலேயே அதிக வலி ஏற்படுவதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.
கைகளில் ஆரம்பிக்கும் வலி தாடை, கழுத்து வரை பரவினால், இது மாரடைப்பை எச்சரிக்கும் மிக முக்கிய அறிகுறியாகும். இவ்வாறு அறிகுறிகள் தோன்றினால் ஒருபோதும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்க்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |