facts about tigers: புலிகளைப் பற்றி இந்த விடயங்கள் தெரியுமா? பலரும் அறிந்திராத உண்மைகள்
புலிகள் பெரும்பாலும் மிக அழகான மற்றும் மூர்க்கமான விலங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான பல்வேறு பழக்கங்களை கொண்டுள்ள புலிகளின் சுபாவம் பற்றி பெரும்பாலான மனிதர்களுக்கு தெரியாத பல விடயங்கள் இருக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, மனிதனின் மெத்தனம் மற்றும் விவேகத்தின் காரணமாக, அவை அழியும் அபாயத்தில் காணப்படுகின்றன.
புலிகள் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் தொடர்பாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
புலிகள் பற்றிய சில உண்மைகள்
புலிகள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் ஒரு புலியின் உரோமத்தை மழித்தால், வரி உடம்பிலும் காணப்படும் என்பது பெரும்பாலனர்கள் அறியாத உண்மை.
அதுமட்டுமன்றி மனிதர்களின் கைகளில் காணப்படும் கைரேகைகள், ஆளுக்கு ஆள் வேறுபடுவது போல, புலிகளின் வரிகளின் வடிவம், புலிக்கு புலி வேறுப்படுகின்றது.
சிங்கத்தைப் போன்று இவை ராஜநடை போடுவது கிடையாது. பதுமையான சுபாவத்தை புலிகள் கொண்டுள்ளன. புலிகள் வேட்டையாடிய இரையை பெரும்பாலும்தனியாகவே உண்ணும்.
குடும்பமாக உண்ணும்போது, ஆண்புலி, குட்டிகளையும் தாயையும் முதலில் சாப்பிட அனுமதிக்கும். முதுகில் குத்துவதில் புலிகளுக்கு நிகர் வேறேதுமில்லை இவை சிங்கத்தை போல் நேரடியாக இரையை தாக்காது.
மாறாக மறைந்திருந்து பின்னால் தான் இரையை அடிக்கும். எந்த மிருகத்தையும் பின்னின்று தாக்குவதே புலிகளின் வேட்டை முறை.
காட்டில் மனிதர்களைக் கூட பின்னால் வந்து தாக்கும். காடுகளுக்குள் செல்லும் போது சிங்கங்களை காட்டிலும் புலிகளிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புலிமைகளைத் தனிமை விரும்பிகள் என்றுதான் சொல்ல வேண்டும். காட்டில் இவை ஒற்றையாகத் திரிவது மிகவும் அரிது. வேம்மையாடுவதிலும் தனிமையை தான் பின்பற்றுகின்றன.
ஒரு நபரையோ அல்லது மிருகத்தையோ கொல்லவோ அல்லது குறைந்தபட்சம் ஒருவரின் எலும்பை உடைக்கவோ புலியின் முன் கையிலிருந்து ஒரு தடவு தடவினாலே போதும் என்று கூறப்படுகிறது.
புலிகள் பகலில் மனித மோதலைத் தவிர்ப்பதுடன் இரவில் தங்கள் பிரதேசத்தைச் சுற்றி ரோந்து செல்வதை விரும்புகின்றது.
புலிகள் பற்றிய உண்மைகளில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், புலிக் குட்டிகள் குருடாகப் பிறக்கின்றன, மேலும் சில மட்டுமே உயிர் பிழைக்கின்றன.
உண்மையில், புதிதாகப் பிறந்த குட்டிகளால் எதையும் பார்க்க முடியாது, அவை தாயின் வாசனையை மட்டுமே பின்பற்றுகின்றன.
புலிகள் அதிகம் தண்ணீரில் நேரத்தை செலவழிப்பதையும் நீந்துவதையும் ,விளையாடுவதையும் விரும்புகின்றது. புலிகளின் ஆயுட்காலம் 20-25 ஆண்டுகள் ஆகும், அவை சிறைப்பிடிக்கப்பட்டாலும் அல்லது காடுகளில் இருந்தாலும் பெரும்பாலான புலிகள் 20 வயதிற்கு முன்பே இறந்துவிடுகின்றன.
புலிகள் மற்ற பெரிய பூனை குடும்பத்தை சேர்ந்த விலங்குகளுடனும் இணையலாம், உதாரணமாக, ஒரு ஆண் புலி பெண் சிங்கத்துடன் இணைந்தால், கலப்பினத்தில் பிறந்த விலங்கு டைகன் என்று அழைக்கப்படுகிறது.
அவை மிகப்பெரிய பூனை இனங்கள் மற்றும் ஆண் சிங்கம் மற்றும் பெண் புலிகளின் கலப்பு இனமான லிகரை விட பெரியதாக வளரக்கூடியவை.
ஒரு லிகர் நான்கு கால்களிலும் 4.5 அடி உயரம் மற்றும் நிற்கும் போது சுமார் 6 அடி உயரம் இருக்கும். புலிகளின் ஒரு நல்ல அம்சம் என்னவென்றால், அவர்களின் உமிழ்நீர் கிருமி நாசினிகள் இயற்கையாகவே காணப்படுகின்றது.
அதனால் புலிகளுக்கு காயம் ஏற்படும் போது கிருமி தொற்றுக்களை தடுக்கும் பொருட்டு அந்த பகுதியை நக்க முனைகின்றது.
அவை மணிக்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வேகமாக ஓடுடக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |