மூடப்பட்ட காபூல் விமான நிலையம்... இந்தியர்களை மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்!
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தலிபான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதால், அங்கு கடும் பரபரப்பு நிலவி வந்தது.
இதனால் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தங்கியிருந்த அமெரிக்க படையினர் 6 ஆயிரம் பேர் வெளியேற தொடங்கியனர். விமான நிலையம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், இதனையடுத்து காபூல் விமான நிலையத்திற்குள் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் வகையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இ
தனால், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பவிருந்த ஏர் இந்தியா விமானம் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அங்கு தற்போது பதட்ட நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.