நான் வரமாட்டேன் போ... அடம் பிடிக்கும் வாத்து குஞ்சுகள்! மில்லியன் பேரை ரசிக்க வைத்த குறும்பு
குழந்தையைப் போலவே, விலங்குகள், பறவைககளின் குஞ்சுகள் செய்யும் குறும்புகள் நம்மை ரசிக்க வைக்கும்.
அந்த வகையில் வாத்து குஞ்சுகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், நீச்சல் குளம் ஒன்றில் தாய் வாத்து ஒன்று, கரையில் நடக்கும் வேளையில், வாத்து குஞ்சுகள் அதனுடன் இணைந்து தண்ணீரில் நீந்திச் செல்வதைக் காணலாம்.
அப்போது நீச்சல் குளத்தில் இருக்கும் யாரோ ஒருவர், அதனை மீன் பிடிக்கும் சல்லடை போன்ற ஒன்றின் மூலம் வாத்துக் குஞ்சுகளை பிடித்து தரையில் விடுகிறார்.
அதில் சில வாத்துக் குஞ்சுகள் பேசாமல் போனாலும், சில முரண்டு பிடிக்கின்றன. அதில் ஒரு வாத்து, மீன் வலையில் அகப்படாமல் தப்பிச் செல்கிறது. அது பயங்கரமாக போக்கு காட்டுகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.
Fishing ducklings from the pool..
— Buitengebieden (@buitengebieden) August 29, 2022
There’s always one.. ? pic.twitter.com/SgY7BHiVYZ