தீபாவளிக்கு முன் Good News சொன்ன ரவீனா ரவி- குவியும் வாழ்த்துக்கள்
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ரவீணா ரவி
புகழ்பெற்ற டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் தான் ரவீணா ரவி.
இவர் அவருடைய அம்மாவை போல டப்பிங் துறையில் சிறந்து விளங்குகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைளுக்கு க குரல் கொடுக்க துவங்கியதையடுத்து, இன்று தவிர்க்க முடியாத டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக விளங்கி இருந்து வருகிறார்.
ரவீணா ரவி டப்பிங் வேலையுடன் சேர்த்து சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய மாமன்னன், லவ் டு டே ஆகிய திரைப்படங்கள் பெரிதும் வரவேற்பை பெற்றது.
விரைவில் திருமணம்
இந்த நிலையில், மலையாளத்தில் “வாலாட்டி” என்ற படத்தில் ரவீனா நடித்திருந்தார்.
அந்த சமயத்தில் பட இயக்குனர் தேவன் ஜெயகுமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது முதன் முறையாக ரவீணா ரவி அவருடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |