Ajith: கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நடிகர் அஜித்... வெளியான அசத்தல் புகைப்படம்
துபாய் கார் பந்தயத்தில் 992 பிரிவில் நடிகர் அஜித்குமாரின் அணி 3ஆவது இடம் பிடித்துள்ள நிலையில், அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் கலந்து கொள்பவர் என்று ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே.
இவர் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். துபாய் கார் ரேஸ் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தாலும், தற்போது அஜித் பங்கேற்றதின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் தளத்திலும் 10 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 992 பிரிவில் அஜித் குமார் அணி 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றியின் காரணமாக அஜித் மிகுந்த உற்சாகத்துடன், கையில் தேசிய கொடியுடன் காணப்பட்டுள்ளார். கையில் தேசியக்கொடியுடன் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தை அஜித், அவர்களுக்கு கை கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |