இன்ஸ்டா போஸ்டில் விவாகரத்து.. துபாய் இளவரசியின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா?
துபாய் இளவரசி ஷேகா மஹ்ராவுக்கும் அமெரிக்க ராப் இசை பாடகர் பிரெஞ்ச் மொண்டனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 வயதாகும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் துபாய் ஆட்சியாளருமான முகம்மது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் தான் ஹைஃபா மஹ்ரா.
இவர், ஷேக் மனா பின் முகம்மது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவரை கடந்த 2023 ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஹைஃபா மஹ்ரா, குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதனால் இந்த விடயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால் உங்களை விவாகரத்து செய்கிறேன். உங்களின் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாவது திருமணம்
இந்த நிலையில், விவாகரத்துக்கு பின்னர், ஹைஃபா மஹ்ரா கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ராப் இசை பாடகரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரெஞ்ச் மொன்டானா யார்?
கரீம் கார்பூச் என்ற இயற்பெயர் கொண்ட பிரெஞ்ச் மொன்டானா மொராக்கோ-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர். மொராக்கோவில் பிறந்து வளர்ந்த இவர் அவருடைய 13 வயதில் குடும்பத்தினருடன் நியூயார்க் நகரில் குடியேறியுள்ளார்.
அதன் பின்னர், கடந்த 2000 ஆம் ஆண்டில் யங் பிரெஞ்ச் என்ற பெயருடன் ராப் இசை பாடகராக தன்னுடைய புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல தடைகளுக்கு பின்னர் ராப் இசை உலகில் தனக்கென தனி பெயரையும் புகழையும் பெற்றிருக்கிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் யங் பிரெஞ்ச், ஹைஃபா மஹ்ராவுடன் டேட்டிங் செய்து வந்தார். தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த உள்ள நிலையில், மாறாக இருவரின் திருமணம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
ஷேகா மஹ்ரா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் என்ற தலைப்பில் பட்டம் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
