இன்ஸ்டாகிராமில் கணவருக்கு விவாகரத்து கூறிய துபாய் இளவரசி- இதுதான் காரணமா?
துபாய் இளவரசி தன்னுடைய திருமண வாழ்க்கையை இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக முறித்துக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம்
துபாயின் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம்- ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்வரை திருமணம் செய்துள்ளார்.
திருமணமாகி சரியாக 12 மாதங்களுக்கு பின்னர் அவர்களின் முதல் குழந்தையான மகளை வரவேற்றிருந்தனர்.
குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆன நிலையில் இருவரும் பிரியப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
விவாகரத்து
அந்த வகையில் இளவரசி கூறுகையில், “அன்புள்ள கணவர், நீங்கள் மற்ற பெண்களுடன் நெருக்கமாக உள்ளதால், நமது விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன்.
நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். கவனமாக இருங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பல விவாதங்களையும் துண்டியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |