6.5 கிலோ தங்கம், வைரத்தில் மின்னும் 'கோல்டன் ரங்கோலி'... டிரெண்டாகும் காணொளி
Dubai Gold Jewel Rangoli: துபாயில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக தங்க நகைகளால் போடப்பட்டுள்ள ரங்கோலி கோலம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தீபாவளி பண்டிகை கடந்த ஞாயிற்று கிழமை உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் முக்கியமாக அகல் விளக்குகள் ஏற்றியும், வண்ண கோலங்கள் வாசலில் போட்டும், பட்டாசுகளை வெடித்தும், புத்தாடை அணிந்தும் கொண்டாடிபுள்ளனர்.
அவ்வாறு வாசலில் கோலம் போடுவதற்கு வண்ண கோலப்பொடி, அரிசி மாவு, பூக்கள் இவற்றினை வைத்து தான் கோலம் போடுவதை நாம் அவதானித்துள்ளோம்.

ஆனால் துபாய் நாட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொண்டு ரங்கோலி போட்டுள்ளது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
துபாய் City Centre Deira மால் பகுதிக்கு வந்திருந்த பார்வையாளர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளால் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கோல்டன் ரங்கோலியை அவதானித்து வியந்தனர்.
இதனை Dubai Festivals and Retail Establishment உடன் இணைந்து Damas என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
எத்தனை கிலோ தங்கம்?
குறித்த மாலில் வைக்கப்பட்டுள்ள தங்க ரங்கோலி 6.5 கிலோ எடை கொண்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு 213 ஆபரணங்களை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் 380 கேரட்டிற்கு அதிகமான வைர ஆபரணங்கள், நெக்லேஸ், கனமான வளையல்கள், மிக நுணுக்கமான கம்மல்கள், டாலர்கள் இவற்றினைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.
குறித்த கலைப்படைப்பினை உருவாக்குவதற்கு 10 கைவினை கலைஞர்கள் கொண்ட குழு அமைத்துள்ளதுடன், இதற்காக 16 மணி நேரம் தங்களது உழைப்பினை போட்டு, நகைகளை தங்களது கைகளால் அடுக்கி இதனை வடிவமைத்துள்ளனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறான கலைப்படைப்பு துாய் போன்ற நாட்டில் தான் சாத்தியம் என்றும், அங்குள்ள பொது பாதுகாப்பு மற்றும் பிரம்மாண்டமான ஆடம்பர காட்சியினையும் அவதானித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலர் மிகவும் சிறப்பானதாக இருப்பதாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதாக கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மிகவும் அழகாக செய்யப்பட்ட ரங்கோலி என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |