உங்க குழந்தைகள் ரொம்ப ஒல்லியா இருக்காங்களா? இந்த ஊட்டச்சத்து லட்டு கட்டாயம் செய்து கொடுங்க
பொதுவாக குழந்தைகளின் ஆரேக்கியத்தில் பெரியலர்களை காட்டிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.காரணம் குழந்தைகள் தங்களாகவே ஊட்டசத்து நிறைந்த உணவுகள் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் பெற்றோர் இது தொடர்பில் நிச்சயம் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும் பட்டச்தில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் எளிதில் நோய்வாய்பட கூடும்.
ஆரோக்கியமாக முறையில் உங்கள் குழந்தைகளின் எடையை அதிகரிக்க விரும்பினால் இந்த dry fruits and nuts கலந்த சுவையான லட்டு செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் - 1/2 கப் அளவு
முந்திரி பருப்பு - 1/2 கப் அளவு
பிஸ்தா - 1/4 கப் அளவு
வால்நட் - 1/2 கப் (விரும்பினால் சேர்க்கலாம்)
பேரீட்சைப்பழம் - 25
ஏலக்காய் தூள் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் லட்டு செய்ய தேவையான பாதாம் பருப்பை என்ணெய் சேர்க்காமல் 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது போல் முந்திரி பருப்பையும் சேர்த்து 5 நிமிடம் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பிஸ்தா பருப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வரை வறுத்து எடுத்துவிட்டு, அதே பாத்திரத்தில் வால்நட் சேர்த்து 3 நிமிடங்கள் வரையில் வறுத்து பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை ஒன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றில் பேரீட்சைப்பழம் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் வறுத்து இறக்கவும்.இப்போது, மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்த பேரீட்சைப்பழதை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரைத்து அதனுடன் முன்னர் அரைத்து வைத்த பருப்பு கலவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கையில் சிறிதளவு நெய் தடவி அரைத்த கலவையை உருண்டைகளாக உருட்டினால் சுவையான ட்ரை ப்ரூட் லட்டு தயார். அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |