குழந்தைகளுக்கு பிடித்த முருங்கைக்கீரை Cheese Ball செய்வது எப்படி?
Drumsticks Leaves Cheese Ball: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸாக சீஸ் பால் முருங்கைக்கீரையை வைத்து எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பள்ளிவிட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலையில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து வைத்திருந்தால் மிகவும் பிடிக்கும். பசியால் வருவதால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிக்கன், முட்டை இவற்றில் தயாரிக்கப்படும் சீல் பால்ஸை முருங்கைக்கீரை கொண்டு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிது (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
சீஸ் துண்டுகள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து, அதில் மைதா, அரிசி, கடலை மாவுகளை சேர்க்கவும். இதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய பூண்டு, வெங்காயம், துருவிய இஞ்சி, கொத்தமல்லி இலை, பன்னீர் துருவல் இவற்றினை சேர்த்து நன்றாக கையால் பிசைய வேண்டும்.
தேவையெனில் சிறிதளது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் பதத்தில் மாவு இருந்தால் போதுமானது.

மாவை சிறிய உருண்டையாக உருட்டி நடுவே சீஸ் துண்டுகளை வைத்து உருட்டிக் கொள்ளவும். இதனை பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து மதிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான முருங்கைகீரை சீஸ் பால்ஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |