ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் அதிரடி
2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, குடிநீர் வழங்கல்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்று காலை கூட்டம் தொடங்கியதும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் பெண்களின் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு நமது அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, சிங்கப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்
குடும்பதலைவி பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படுகிறது, முதற்கட்டமாக மூன்று சிலிண்டர் வழங்கப்படும், சிலிண்டருக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினர் பயன்பெறுவர் என அறிவித்தார்.
