காவல்நிலையத்தில் பொலிஸ் வாகனத்தை திருடிய நபர்! சிரிக்க வைக்கும் காரணம் இதோ
இந்தியாவில் பொலிஸாரின் வாகனத்தினை நபர் ஒருவர் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான கர்நாடகாவில் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஆன்னிகேரி பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பா(45). ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் அங்கிருந்த காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட mahindra bolero வண்டியை திருடிச் சென்றுள்ளார். எதார்த்தமாக உள்ளே வந்த அவர், எடுத்துச்செல்லும் விதமாக அந்த வண்டியின் சாவியும் அதிலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து திருடிச் சென்ற அவர் சுமார் 112 கிலோ மீற்றர் ஓட்டிச்சென்று, களைப்பு ஏற்பட்டதால் வண்டியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.
அப்பகுதியில் பொலிஸ் வாகனம் வெகுநேரமாக நிற்பதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த பின்பு குறித்த நபரிடமிருந்து வண்டி மீட்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் விசாரணையில், தனது நீண்ட நாள் கனவு பொலிஸ் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பது. அதனை நிறைவேற்றிக் கொள்ளவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
தற்போது குறித்த நபரின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் இதுவரை இவர் மீது ஒரு குற்ற புகார்களும் இல்லை என்று கூறப்படுகின்றது.