மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் பானங்கள்! நீங்களுக்கும் குடிக்கலாம்
பொதுவாக தற்போது இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று.
துரித உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ளல் மற்றும் போதியளவு உடற்பயிற்சி இன்மை ஆகிய காரணங்களால் எடை ஒரு அளவில்லாமல் அதிகரிக்கின்றது.
டயட், முறையான உடற்பயிற்சி இவை இரண்டையும் சரியாக செய்வோம் என்றால் எடையை இலகுவாக குறைக்கலாம்.
அத்துடன் வெளியில் சென்று இதற்கான உணவுகளை வாங்குவதை விட வீட்டிலுள்ள உணவுகளை கொண்டு டயட்டில் இருக்கலாம்.
அந்த வகையில், உடல் எடையை குறைக்கும் பானங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
எடையை குறைக்கும் பானங்கள்
1. தேன் - எலுமிச்சை தண்ணீர்
அதிக எடையால் அவஸ்தைப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றுடன் தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடிப்பதால் எடை வேகமாக குறைகிறது. அத்துடன் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
2. கிரீன் டீ
எடை இழப்பிற்காக பயன்படுத்தும் டீக்களில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகையால் காலையில் எழுந்தவுடன் புதினா இலைகளை கிரீன் டீயுடன் கலந்து குடித்தால் வேகமாக எடை குறையும்.
3. பெருஞ்சீரக தண்ணீர்
சமையலறையில் பெருஞ்சீரகம் இல்லாமல் இருக்காது. எனவே காலை நேரங்களில் பெருஞ்சீரகத்துடன் தண்ணீரில் சேர்த்து குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் அதற்கு நிரந்தர தீர்வு தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |