கோடைக்கால தாகத்தை தணிக்கும் பிளாஸ்டிக் போத்தல்களினால் இப்படியொரு ஆபத்தா? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது இருக்கும் பெரும்பாலானவர்கள் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்தி தான் தண்ணீர் குடிக்கிறார்கள்.
இதனால் உடலில் காலப்போக்கில் பல அபாயங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆனாலும் வீட்டு சமையலறைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஜாடிகள், கன்டெயினர்ஸ், பாத்திரங்கள், குப்பை போடுவதற்கான பைகள் என அனைத்து விடயங்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்துகின்றோம்.
இதனால் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் அபாயங்கள் அதிகரித்துள்ளது. இதனை சூழலில் இருந்து அகற்றுவதும் பெரிய டாஸ்க்காக இருக்கின்றது.
அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையால் ஏற்படும் விளைவுகள்
கோடைக்காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிப்பதற்கு பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு பயன்படுத்தும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET - Polyethylene Terephthalate) என்ற மெட்டீரியலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருள் மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும் கெமிக்கலாகும்.
ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும்.
இனப்பெருக்க சிக்கல்கள் (reproductive problems)
காலப்போக்கில் கேன்சர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
PET-ஆனது Antimony Trioxide மற்றும் Phthalates-ஐ வெளியேற்றும்.
சரும பிரச்சினைகள் ஏற்படும்.
Phthalates நாளமில்லா சுரப்பியை சீர்குலைக்கும்