பால் டீ Vs துளசி டீ இரண்டில் எது சிறந்தது?
பொதுவாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் மூலிகை பொருட்களை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
அப்படியாயின், மூலிகைகளின் ராணியாக பார்க்கப்படுகிறது துளசியில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நோய்களை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்டது.
இதிலுள்ள மருத்துவ குணங்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது நேரடியாக உடலுக்கு சேர்கிறது. பால் கலந்த டீ குடிப்பதற்கு பதிலாக துளசி கலந்த டீ குடிக்கலாம்.
அந்த வகையில், துளசி டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
துளசி டீ குடிக்கும் பழக்கம் இருக்கா?
1. சளி இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் துளசி டீ குடித்து வந்தால் பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு போன்றன பண்புகள் மேம்படும்.
2. தினமும் காலையில் துளசி டீ குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
3. இதயத்தை வலுவாக வைத்துக் கொள்ள துளசி டீ குடிக்கலாம். இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். அதே போன்று இதயம் தொடர்பான நோய்கள் வருவதும் குறைவாக இருக்கும்.
4. குடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையுள்ளவர்கள் துளசி டீ தினமும் குடித்து வந்தால் செரிமான கோளாறு குணமாகும். இதனால் அவர்களுக்கு இருக்கும் குடல் ஆரோக்கியம் பிரச்சினையும் கட்டுக்குள் வரும்.
5. தினமும் துளசி டீ குடித்து வரும் ஒருவருக்கு குடல் புண், வாய் புண் உள்ளிட்ட பிரச்சனைகள் வருவது குறைவாக இருக்கும். அதே சமயம் வாய் துர்நாற்றம் பிரச்சினையுள்ளவர்களும் பால் டீக்கு பதிலாக துளசி இலை போட்டு டீ குடிக்கலாம். உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு இது உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
