ஆபத்தை ஏற்படுத்தும் எலுமிச்சை ஜூஸ்... இவ்வளவு பக்கவிளைவா? இனி அதிகமா தொடக் கூட வேண்டாம்
எலுமிச்சை ஜூஸ் குடித்தால் எடை குறையும், நீரிழிவைத் தடுக்கும், அஜீரணத்தைப் போக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
குறிப்பாக எலுமிச்சை ஜூஸ் ஆரோக்கியமான பானம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்தால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
குறிப்பாக பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எலுமிச்சை ஜூஸ் ஆபத்து
பல்லின் எனாமலை அரிக்கும்
எலுமிச்சை அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்கள் ஆகும். ஒருவர் எலுமிச்சை சாற்றை அடிக்கடி மற்றும் அதிகமாக உட்கொண்டால், எலுமிச்சையின் அமிலத்தன்மையின் காரணமாக, பல் கூச்சம் ஏற்பட்டு பல் சிதைவு ஏற்படும்.
பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாகப் படுவதைத் தவிர்க்க ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை ஜூசை குடித்த பிறகு, பல் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவைத் தடுக்கும்.
தலைவலியை ஏற்படுத்தும்
எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோஅமைன் உற்பத்தி செய்வதால் இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும்.
நீங்கள் தீவிர தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
வயிற்றுப் பிரச்சனைகளையும் நெஞ்செரிச்சலையும் அதிகரிக்கும்
சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், அமில வீச்சு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
வாய் புண்
சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன் வாய் புண்கள் முழுமையாக குணமாகும் வரை காத்திருப்பது நல்லது.
முக்கிய குறிப்பு
ஆபத்துகளைக் குறைக்க உங்கள் பானத்தில் எலுமிச்சைத் தோல்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிடுவது நல்லது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அதனால், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நல்லது என்று அளவுக்கு அதிகமாக குடித்து பக்கவிளைவுகளுக்கு ஆளாகாதீர்கள்.