இந்த பிரச்சனை இருக்கா? அப்போ தவறியும் கரும்பு ஜூஸ் குடிக்க கூடாது
கரும்பு ஜூஸில் எண்ணற்ற ஆரோக்கிய பயன்கள் கொட்டி கிடந்தாலும் சில நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த கரும்பு ஜீஸை குடிக்க கூடாது இதை விரிவாக பார்க்கலாம்.
கரும்பு ஜூஸ்
இந்த கோடை காலத்தில் அனைவரும் பல ஜூஸ்களை குடித்து வரும் நிலையில் மக்களால் அதிகமாக விரும்பப்படுவது இந்த கரும்பு ஜூஸ் தான்.
கரும்பில் கார்போஹைட்ரேட், மினரல்ஸ், ப்ரோட்டீன்ஸ், இரும்பு, ஜிங்க், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்ஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை குடிக்க கூடாது. பற் சொத்தை இருப்பவர்கள் கரும்பு சாற்றை தவிர்க்க வேண்டும். இதை தொடர்ந்து அல்லது அதிகமாக பருகினால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளது.
அதிகமாக கரும்பு ஜூஸ் குடித்தால் அது கலோரிக் சர்ப்ளஸ் மற்றும் ரத்த சக்கரை அளவுகளை கொடுக்கும்.
செரிமான பிரச்சனை இருப்பவர்கள் இதை குடித்தால் வாந்தி, தலைசுற்றல், தூக்கமின்மை மற்றும் வயிற்று போக்குடன் கூடிய வயிற்று வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்க கூடும்.