காலையில் வெறும் வயிற்றில் இந்த சாறு குடிங்க - உச்சந்தலை முதல் கல்லீரல் வரை பாதுகாப்பு
நாம் காலையில் எழுந்தவுடன் தேடுவது டீ காபி தான். ஆனால் இது உடலுக்கு அவ்வளவு நன்மை தராது. சிலருக்கு காலையில் டீ குடிக்கும் பழ்கம் இருக்கும்.
சிலர் வேறு எதாவது பானங்களை கூட குடிப்பார்கள். நாம் உடலுக்கு காலையில் என்ன எடுத்துக்கொள்கிறோஆமா அது தான் அன்றைய நாள் பூராகவும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்கும்.
இதற்காக தான் சுகாதார நிபுணர்கள் காலையில் மிகவும் ஆரோக்கியமான பானமோ உணவோ சாப்பிட சொல்கிறார்கள். அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கூடிய ஒரு சாற பற்றி பார்க்கப்போகின்றாம்.

நெல்லி - முருங்கை ஷாட் நன்மைகள்
நாம் காலையில் எழுந்ததும் நெல்லி,முருங்கை ஷாட் வெறும் வயிற்றில் குடிக்க்க வேண்டும். அப்போது தான் நம் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
இதனால் செரிமான சக்தி அதிகரிக்கும். ஜீரணக் கோளாறு பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் சரியாகும். குடலில் நாள்பட்ட கழிவுகளை வெளியேற்றி உள்ளிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
அதனுடன் குடல் சுத்தம் மிகவும் முக்கியம். இதற்காக தான் இந்த சாறை தினமும் காலையில் எழுந்தவுடன் குடிப்பது அவசியம். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க - நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. அதேபோல் முருங்கை இலையில் இல்லாத சத்துக்களே கிடையாது. அதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியமும் மிக அதிகம். இதன் காரணமாக நெல்லிக்காய் மற்றும் முருகையின் சத்துக்கள் சேர்ந்து நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் பருவகால நோய்கள் வராது.
சரும பளபளப்பு கிடைக்கும் - இந்த நெல்லிக்காய் - முருங்கை ஷாட் குடித்தால் சருமம் பளபளப்பாகும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி ஸ்கின்னுக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு இவற்றில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், டாக்சின்களை வெளியேற்றி கரும்புள்ளிகளை மறையச் செய்து சருமத்தை பளபளப்பாக மாற்றி தரும்.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு - நெல்லிக்காய், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை மூன்றும் குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது ரத்த சாக்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். குறிப்பாக காலை உணவுக்குப் பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். எனவே இதை காலை எழுந்ததும் குடித்துவிட்டு சாப்பிட்டால் நன்மை.

தயாரிக்கும் முறை
முதலில் இஞ்சியை தோல் சீவி, கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை மற்றும் கறிவேப்பிலை இலைகளைக்க கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கை இலை இல்லையென்றால் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

அதோடு சீரகம், மிளகு, மஞ்சள், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை ஒரு ஃபில்டரில் போட்டு நன்கு வடிகட்டி திக்கான ஜூஸாக எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 2 சிட்டிகை அளவு பிங்க் சால்ட் சேர்த்து கலந்தால் நெல்லி முருங்கை சாறு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |