சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த நபர்! அமேசன் காட்டில் சம்பவம்
பிரேசிலில் அமைந்திருக்கிறது அமேசன் காடு. அமேசன் காடானது, சுமார் 55 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இங்கு 390 பில்லியன் மரங்கள் உள்ளன.
பொதுவாக ஒரு இடத்தை சுற்றிப்பார்க்க அந்த இடத்தைப் பற்றி நன்றாக அறிந்த ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு யாரையும் அழைத்துச் செல்லாததால் பொலிவியாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்...
30 வயதான ஜொனாட்டன் அகோஸ்டா என்பவர் தனது நண்பர்களுடன் வேட்டையாடச் சென்றுள்ளார். சென்ற இடத்தில் வழி தவறி தனது நண்பர்களை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
நண்பர்கள், குடும்பத்தார் என அனைவரும் தேடியும் 30 நாட்கள் வரையில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அகோஸ்டாவை ஊர்வாசிகள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கண்விழித்ததும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, எங்கெங்கோ சென்றும் அவரால் வெளியே வர முடியவில்லையாம். 31 நாட்கள் வெறும் பூச்சி, புழுக்களை உண்டு, மழை நீரை தனது சப்பாத்தில் தேக்கி வைத்து குடித்துள்ளார்.
தண்ணீர் முடிந்ததும் தனது சிறுநீரையும் குடித்துள்ளாராம். காட்டு விலங்குகளிடம் ஓடி மறைந்து வாழ்ந்துள்ளார். பல நாட்களாக நடந்து திரிந்ததால், அங்கு ஊர்வாசிகளை பார்த்து தன்னை காப்பாற்றும்படி சப்தமிட்டுள்ளார்.
அதன்பின்னரே அவர்கள் இவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 31 நாட்களாக எதுவும் உண்ணாததால் அவர் 17 கிலோ நிறை குறைந்துள்ளார். தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு ஒரு இடத்துக்கு சுற்றிப் பார்க்க செல்லும்போது அந்த இடத்தைக் குறித்து தெளிவான அறிவுடைய நபர்களை கூட அழைத்துச் செல்ல வேண்டும்.