கடகடனு உடல் எடை குறையணுமா? ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தா இப்படி சாப்பிடுங்க
இன்றைய வாழ்க்கை முறை மிகவும் அவசரமாகவும், சீரற்றதாகவும் மாறி விட்டது. இதன் விளைவாக, பலருக்கும் நாள் தோறும் உடல்நல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக மலச்சிக்கல் மற்றும் உடல் பருமன் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வாக வீட்டில் செய்யக்கூடிய சில எளிய இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தான் வெந்தய விதை நீர் அருந்துதல்.
ஆயுர்வேதத்தின் படி, வெந்தய விதை நீர் உங்கள் உடல்நலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
நாளாந்த உணவுப் பழக்கத்தில் வெந்தய விதை நீரை சரியான அளவிலும் முறையிலும் சேர்த்தால், பல்வேறு வகையான உடல் பிரச்சனைகள் குறையும், உடல்நலம் மேம்படும்.
வெந்தய விதை நீர் நன்மைகள்
வெந்தய விதை நீர் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என ஆயுள்வேதத்தின்படி கூறப்படுகின்றது.
வயிற்றுப் பிரச்சனைகள், கோளாறுகள் மற்றும் செரிமானக் குறைபாடுகள் போன்றவற்றிலிருந்து விடுபட நினைத்தால் அதற்கான இயற்கை தீர்வு வெந்தய விதை நீர் தான்.
இந்த நீரை தினசரி உணவுத் திட்டத்தில் சேர்த்தாலே போதுமானது. இதில் உள்ள நன்மைக்கூறுகள், குடலுக்கு மட்டுமல்லாமல் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்கள் எடை குறைக்கும் முயற்சியை எளிமையாக்க விரும்பினால் அதற்கு வெந்தய விதை நீர் ஒரு சிறந்த உதவியாக அமையும். இந்த நீரை அன்றாட உணவுத் திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலை உள்ளிருந்து சுத்தமாக்கி, எடை இழப்பை வேகப்படுத்தலாம்.
வெந்தய விதை நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால், அதீத பசியை தடுக்க உதவுகிறது. இந்த நன்மைகள் வெந்தய விதை நீர் குடிப்பதால் கட்டாயம் உங்கள் உடலில் தெரியும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வெந்தய விதை நீர் தயாரிப்பு
- முதலில், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை சேர்க்கவும்.
- பிறகு, இதனை இரவு முழுவதும் (6–8 மணி நேரம்) நன்கு ஊறவைக்கவும்.
- மறுநாள் காலை, அந்த தண்ணீரை வடிகட்டி வெந்தய விதைகளை பிரித்தெடுக்கவும்.
- வெறும் வயிற்றில் அந்த நீரை பருகவும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இயற்கை பானம் உங்கள் உடல்நலத்தை மேம்படுத்தும். செரிமானம், இரத்த சர்க்கரை அளவு, எடை மேலாண்மை மற்றும் தோல் பிரச்சனைகள் போன்றவற்றை சமாளிக்க இது உதவிகரமாக இருக்கும். உங்கள் தினசரி வாழ்கையில் வெந்தய விதை நீரை சேர்த்துக்கொண்டு ஆரோக்கியத்தை கட்டுப்படுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
