சரும பளபளப்பிற்கு மசாலா இலை ஜுஸ் போதுமாம்! எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்கள் எப்போதும் தங்கள் முகத்தை அழகாக வைப்பதற்கு விரும்புவார்கள்.
இதற்காக சந்தையில் கிடைக்கும் இரசாயன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் இயற்கையாக கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தினால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் சிவரிக்கீரை இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சாற்றை குடிப்பதால் சரும பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும் என கூறப்படுகின்றது.
இந்த கூற்றின் படி சிவரிக்கீரை சாற்றை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சிவரிக்கீரை சாற்றை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. சிவரிக்கீரையில் அளவிற்கு அதிகமான தண்ணீர் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமம் பளபளப்பை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியளிக்கவும் உதவியாக இருக்கின்றது.
2. சிவரிக்கீரையில் இருக்கும் சாற்றை குடிப்பதால் சருமத்தில் இருக்கும் வறட்சி இல்லாமல் போகும்.
3. ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிவரிக்கீரையில் நினைத்து பார்க்க முடியாத அளவு இருக்கின்றது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை நீக்கி கருவளைய பிரச்சினையை குறைக்கிறது.
4. வாயு மற்றும் அஜீரணம் பிரச்சினை இருப்பவர்கள் சிவரிக்கீரை சாற்றை எடுத்து கொள்ளலாம். மேலும் தோல் தொடர்பான பிரச்சினைகளை அகற்றவும் உதவுகிறது.
5. சிவரிக்கீரையை பச்சையாகவும், சமைத்தும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அத்துடன் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |