இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கணுமா? உடனே இந்த ஒரு பானத்தை குடிங்க...
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும்.
எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள இந்த ஒரு பானம் உங்களுக்க உதவி புரியும்.

வேப்பிலை நீர்
வேப்பிலை உடலில் மாயங்களை செய்யக்கூடிய திறன் கொண்டது. அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
ஏனெனில் வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.
அதற்கு வேப்பிலையை மென்று சாப்பிடலாம் அல்லது 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.