எலுமிச்சை ஜூஸை தோலோடு குடிச்சா எடை குறையுமா? என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிட்டு குடிங்க
எலுமிச்சை பழம் இல்லாத வீடே இருப்பதில்லை.
எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது என்று பல காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதனை வெறும் பானத்தில் கலந்து குடிக்கவும், சாலட் மீது புளியவும் மட்டுமே பயன்படுகிறது என்று நினைத்தால் அது தவறு.
அதையும் மீறி இந்த சிட்ரஸ் பழம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
எடை அதிகரிப்பால் அவஸ்தை படுபவர்களுக்கு எலுமிச்சை மிக சிறந்த மருந்து.
உடல் எடை மெலிவதற்கு
எலுமிச்சையில் அதிக அளவு பெக்டின் பைபர் உள்ளது. அது பசியை போக்க உதவும்.
பெக்டின் உள்ள உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த அளவில் உள்ளதால், அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும்.
மேலும் இவ்வகை உணவுகள், உடம்பில் உள்ள இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், உடம்பும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இது கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்கச் செய்யும்.
எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பது எப்படி?
வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள்.
நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.
எலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்கும்.
எத்தனை முறை?
ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம்.
மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு தினமும் எழுந்ததும் வெறும் வயிற்றில் பருகலாம்.
இதில் உள்ள பாலிபினைல் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது.
அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட டயட்களில் கூட உடல் எடையை வேகமாகக் குறைக்க எலுமிச்சை தான் பயன்படுத்தப்படுகிறது.