வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் உடல் எடை குறையுமா?
நெல்லிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் சாறு
ஆயுர்வேதத்தின்படி, நெல்லிக்காய் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க நெல்லிக்காய் சாறு அருந்துவது ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி நெல்லிக்காய் சாற்றை சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
அந்த வகையில் நெல்லிக்காய் சாற்றின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

உடல் எடை குறைக்க
நெல்லிக்காய் சாற்றை சரியான அளவிலும் சரியான முறையிலும் அருந்துவது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடல் எடை குறைக்க விரும்பினால் நீங்கள் நெல்லிக்காய் சாற்றை குடிக்கலாம்.
சிறந்த பலன்களைப் வேண்டும் என்றால் அதிகாலையில் வெறும் வயிற்றில் 10 முதல் 20 மில்லி நெல்லிக்காய் சாற்றை ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.

நோய் எதிர்ப்புச் சக்தி
நெல்லிக்காய் சாற்றில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.
மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்க நெல்லிக்காய் சாற்றை குடிக்கலாம். நெல்லிக்காய் சாறு உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
நெல்லிக்காய் சாறு உங்கள் இதய ஆரோக்கியத்திலும் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்பினால் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.
நெல்லிக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை தரும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவுத் திட்டத்தில் நெல்லிக்காய் சாற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காய் சாறு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |