வீட்டிற்குள் பாம்பு வருவது போல கனவு எதற்காக வருகிறது? சாஸ்திரம் கூறும் உண்மை
கனவு சாஸ்திரத்தின்படி வீட்டிற்குள் பாம்பு வருவது போல கனவு கண்டால் எதிர்கால வாழ்வில் இப்போது இருக்கும் வாழ்வில் என்ன நடக்கும் எதற்கான எச்சரிக்கை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பு கனவு
கனவு வருவது இயல்பு என்பது தெரியும். ஆனால் கனவுகள் ஜோதிடப்படி மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இது நம் வாழ்க்கையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் அது கெட்டவையாக இருந்தாலும் நல்லவையாக இருந்தாலும் அதில் இருந்து எம்மை எப்படி எச்சரிக்கையாக வைத்துக்கொள்வது என்பதற்கு ஒரு முன்கூட்டிய எடுத்துக்காட்டு எனலாம்.
இதன்படி வீட்டிற்குள் பாம்பு வருவது போல அல்லது பாம்பு சம்பந்தப்பட்ட கனவு கண்டால் வாழ்க்கையில் எதை எச்சரிக்கப்படுகின்றது என்பதை பார்க்கலாம்.
பாம்பு வீட்டுக்குள் வந்து வெளியே போவது போல் கனவு கண்டால், நீங்கள் உங்களுடைய குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
இது குலதெய்வத்தை நீண்ட காலமாக வணங்காமல், குலதெய்வம் கோவிலுக்கு செல்லாமல் அல்லது குலதெய்வத்திற்கு செய்த நேர்த்திடனை நிறைவேற்றாமல் இருந்தால் அதை உங்களுக்கு நினைவூட்டும் வகையில் வரும்.
பாம்பு நம் உடலின் மீது ஏறுவது போல கனவு கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். இந்த கனவு கண்டால் கட்டாயம் இருப்பதை விட நல்ல நிலைக்கு செல்வீர்கள்.
பாம்பு வீட்டில் இருந்து வெளியேறுவது போல் கனவு கண்டால், கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் இதுவரை இருந்த துன்பங்கள் எல்லாம் விலகி சந்தோஷம் வரும் என்று அர்த்தம்.
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் உங்களுடன் இருப்பவர்களில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.
வீட்டிற்குள் நுழைந்த பாம்பு யாரையாவது கடிப்பது போன்று கனவு கண்டால், நீங்கள் அதிகம் நம்பும் நபர் உங்களை ஏமாற்ற போகிறார்கள் அவர்களிடம் ஜா்கிரதையாக இருக்க எச்சரிக்கும் கனவாகும். ஆகையால், யாரையும் கண் மூடித்தனமாக நம்பாதீர்கள்.
நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால், குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். இதே நேரம் நல்ல பாம்பு வீட்டில் சுற்றுவது போன்று கனவு கண்டால், உங்களுக்கு நோய்கள் வரலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நல்ல பாம்பு வீட்டில் மறைந்து இருப்பது போல் கனவு கண்டால், வீட்டில் உள்ளவர்களால் பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். எனவே இதற்கான வாய்ப்புக்களையும் சந்தர்பங்களையும் தவிர்ப்பது நல்லது.
எனவே பாம்பு சம்பந்தப்பட்ட கனவுகள் வந்தால் அதை புறக்கணிக்காமல் அதன்படி என்ன பலன் என்பதை அறிந்திருப்பது நல்லது. அது போல பாம்பு விஷம் என்பதற்காக பாம்பு சம்பந்தப்பட்ட கனவு வந்தால் பயம் தேவையில்லை என ஜோதிடம் கூறுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
