பாதி மனிதன் பாதி மிருகம்: மனிதராக இருந்து விலங்காக மாறிய பெண்! வைரலாகும் புகைப்படங்கள்
எம்மில் ஒரு சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றாலே கொள்ளைப் பிரியம். அவை இல்லாமல் வாழ முடியாத நிலையிலும் ஒரு சிலர் இருக்கிறார்கள்.
ஆனால் மற்றவர்கள் இந்த யோசனையை உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அவர்கள் விரும்பும் விலங்குகளைப் போல தோற்றமளிக்க முயற்சி செய்கிறார்கள். அவ்வாறானவர்களை "தேரியன்கள்" என்று அழைக்கப்பார்கள்.
விலங்காக மாறிய பெண்
இவ்வாறு செல்லப்பிராணியின் மேல் கொண்ட அதிக ஆசையால் தன் உடலில் வித்தியாசமான மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறார்.
டியாமட் ஈவா மெடூசா என்ற பெண்ணே இவ்வாறு தன்னை ட்ரான்ஸ் பெண் என அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். மெடூசா அமெரிக்காவிலுள்ள ஆரிசோனா மாகாணத்தில் ரிச்சர்டு ஹெர்னாண்டஸாக பிறந்துள்ளார்.
இவர் காது, மூக்கு, நாக்கு என அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளார். இவர் முன்னாள் வங்கி ஊழியராக இருந்தவர்.
பல அறுவைச் சிகிச்சையின் மூலம் அறுவை சிகிச்சைகள் மூலம், காது மற்றும் மூக்கு துவாரங்களை நீக்கி, கண்களை பச்சை நிறமாக்கி, தனக்கு கொம்பும் வைத்திருக்கிறார்.
இதற்காக அவர் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை செலவு செய்திருக்கிறார்.
பாதி மனிதன் பாதி மிருகம்
ரிச்சர்டு ஹெர்னாண்டஸாக பிறந்த மெடூசா, பின்னர் அறுவைசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.
ஆனால் அப்போதும் பாகுபாடு, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளார். நாளடைவில் மனிதர்களுடன் தொடர்பை முறித்துக்கொண்டு வேறு ஒரு வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார்.
"நான் உண்மையான மற்றும் நிஜத்தில் வாழும் ’மனித ஜந்து’, அதாவது ’பாதி மனிதன், பாதி மிருகம்’ என நான் நம்புகிறேன்” என்று மெடுசா தெரிவித்திருக்கிறார்.