விஜய் தனுஷ்ன்னு மாற்றி பேசி வசமாக சிக்கிய கயாடு லோஹர்: வைரலாகும் காணொளி
டிராகன் பட நடிகை கயாடு லோஹர் தற்போது தனக்கு பிடித்த நடிகர் குறித்து வெளிப்படையாக பேசி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
ட்ராகன் படத்துக்கு பின்னர் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் கயாடு லோஹர்.
மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ளார்.
முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். அதனை தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயாடு லோஹரிடம் "உங்களுடைய Celebrity Crush யார்" என்ற கேள்வி எழுப்பபட்டிருந்தது.
இதற்கு சிறிதும் யோசிக்காமல் பதிலளித்த கயாடு லோஹர் "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush" என கூறினார்.
மேலும் "விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது தெறி தான்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில், "உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்" என ரசிகர் கேள்வி எழுப்ப, "தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் இடமில்லை" என நடிகை கயாடு லோஹர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு காணொளிகளையும் பதிவிட்டு இணையத்தளவாசிகள் மாற்றி மாற்றி பேசி கயாடு லோஹர் மாட்டிக்கொண்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Before she got into Vijay's mouthpiece AGS network.. pic.twitter.com/PwbuMlLYar https://t.co/YEsgfkN8zq
— Trollywood 𝕏 (@TrollywoodX) March 6, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |