வீட்டில் கடைபிடிக்க வேண்டிய 10 சாஸ்திரங்கள்! தவறும் பட்சத்தில் ஆபத்து ஏற்படுமாம்...
பொதுவாக வீடுகளில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் அடிக்கடி சாஸ்திரம் பார்ப்பார்கள்.
இதனால் முறையாக கடைபிடிக்கும் படி வலியுறுத்துவார்கள். இந்த பழக்கம் நமது முன்னோர்கள் காலந்தொட்டு இருப்பதால் தமது வீடுகளில் வேத வசனம் போல் சொல்லப்படுகிறது.
மேலும், பெரியோர்களின் கூற்றின் இவர்கள் கூறும் சாஸ்திரங்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் நமக்கு ஆபத்து ஏற்படும் என்பார்கள்.
அந்தவகையில் பெரியவர்கள் கூறும் சாஸ்திரங்கள் என்ன என்பதையும், அதனை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
சாஸ்திரங்களும் அதன் பலன்களும்
1. பொதுவாக சாப்பிடும் போது சிலர் இடது கையால் சாப்பாடுவார்கள் இவ்வாறு சாப்பிட்டால் விட்டிலுள்ள செல்வம் அழியும்.
2. வீடுகளில் அடிக்கடி இருக்கைகளை மாற்றிக் கொண்டே இருப்போம். இவ்வாறு செய்யும் போது இடது கையால் இருக்கையை தூக்கிப் போடக் கூடாது. இவ்வாறு செய்யும் போது உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.
3. சிலர் தரையில் அமர்ந்திருந்து கொண்டு ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, மழை பெய்யும் போது இடைநடுவில் ஓடக்கூடாது மற்றும் அடுப்பில் நெருப்பு எறிந்துக் கொண்டு இருக்கும் போது வாயால் ஊதக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டிற்கு நல்லதல்ல.
4. வீடுகளில் இரவு வேலைகளில் ஆண்கள் காற்சட்டை அல்லது சாரம் அணிந்துக் கொண்டு சாப்பிடுவார்கள். இது போன்று குடும்பமாக இருக்கும் ஒரு ஆண் உணவு சாப்பிடக்கூடாது.
5. பொதுவாக வீடுகளில் சுப காரியங்கள் அடிக்கடி நடக்கும் இதன்போது வீட்டிலுள்ள திருமணம் ஆகாமல் பெண்களுடன் தொடர்பில் இருப்பவர்களை சுப காரியங்களை செய்ய அனுமதிக்க கூடாது.
6. கிராமப்பகுதிகளில் கணவன், மனைவி இரவு நேர சாப்பாட்டிற்கு பின்னர் வெற்றிலை மடித்துக் கொடுத்து மாற்றிக் கொள்வார்கள். உதாரணமா, மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
7. வீடுகளில் தீ சம்பந்தப்பட்ட தீக்குச்சி, மற்றும் சூடம் போன்ற பொருட்களை காலில் போட்டு மிதிக்கக் கூடாது. ஏனெனின் இவ்வாறு செய்தால் பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
8. சில வீடுகளில் வறுமை காரணமாக குரு, கர்ப்பிணி, நோயாளி, சன்னியாசி போன்றோர்கள் சாப்பிட வழியில்லாமல் இருப்பார்கள். இவர்களை கண்டும் காணாத மாறிச் செல்லக் கூடாது. இவர்களின் தேவையறிந்து உதவிச் செய்ய வேண்டும். புண்ணியங்கள் வந்து சேரும்.
9. பொதுவாக வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள் கேட்காமல் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது. இவ்வாறு செய்வதால் நம்மீது இருக்கும் மரியாதை குறைந்து விடும்.
10. வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போது, கட்டாயமாக தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும். அப்போது தான் வீட்டிற்கு மகாலட்சுமி வரும் என்பார்கள்.