இடது கை பழக்கம் உடைய குழந்தைகள் இப்படியொரு அதிர்ஷ்டசாலியா? பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்
பொதுவாக நமது வீடுகளில் குழந்தைகள் இடதுகை பழக்கம் உடையவர்களாக இருந்தால் அவர்களைக் கண்டித்து வலது கையை பயன்படுத்த கூறுவதும், இடது கையினை பயன்படுத்துவது பெரிய குற்றமாகவே கருதப்படுகின்றது.
அதாவது கலாச்சாரம், நாகரிகம் எனும் பெயர்களால் வலது கைகளால் ஒரு பொருளைக் கொடுத்து வாங்குவது சரியானது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான இடது கைப்பழக்கம் உடையவர்கள் பெற்றோர்களின் கட்டாயத்தின் பெயரில் வலது கையைப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் அவர்களால் அதனை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் திணறுவர். வலது கைப் பழக்கத்தைப் போல இடது கைப் பழக்கமும் இயல்பானது தான்.
இடது கை பழக்கத்தை கட்டுப்படுத்தக் கூடாதா?
இடது கைப் பழக்கம் உடையவர்கள் யாரும் வலிந்து இடது கையைப் பயன்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு அணிச்சை செயல் போன்றது மட்டுமின்றி அது மரபணு சார்ந்தது.
குழந்தை கருவில் இருக்கும் போதே அது முடிவு செய்யப்பட்டு விடுமாம். இடது கைப் பழக்கம் உடையவர்களுக்கு வலது பக்க மூளையும், வலது கைப் பழக்கம் உடையவர்களுக்கு இடது பக்க மூளையும் வேலை செய்யுமாம்.
இதனால் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி வலது கையைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் அவர்களின் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இடது கை பழக்கம் உடையவர்களின் எப்படி இருப்பார்கள்?
இடது கைப் பழக்கம் உடையவர்களுக்கு தனித்துவமான திறமைகள் உள்ளது. வலது கைப் பழக்கம் உடையவர்களைவிட இடது கைப் பழக்கம் உடையவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். இதன் காரணமாக அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும்.
இடதுகை பழக்கம் உடையவர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்களாம்.
இடது கைப்பழக்கம் உடையவர்கள் சவால்களையும், கஷ்டங்களையும் எளிதில் சமாளிப்பார்களாம். பிரச்சனைகளையும், சவால்களையும் வேறு கோணத்தில் யோசித்து தீர்வு காணக்கூடியவர்களாம்.
இடது கைப் பழக்கம் உடையவர்களால் வேகமாக எழுதவும், டைப் செய்யவும் முடியுமாம்.
ஆனால் இவ்வுலகில் இடதுகை பழக்கம் உடையவர்கள் வாழ்வது என்பது சவாலே... காரணம் நான் அன்றாடம் உபயோகப்படுத்தும் கதவின் கைப்பிடியிலிருந்து, வெளியே செல்வதற்கு இயக்கும் கார் என அனைத்தும் வலது கை பழக்கம் உடையவர்கள் பயன்படுத்துவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.