யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ வெந்தயம் தான் சிறந்த தெரிவு
யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும்.
பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும். பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது.
இருப்பினும், ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.
இரத்தத்தில் அதிக யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. பின் இவற்றின் காரணமாக மூட்டுவலி, வீக்கம், குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கசிதல், முதுகில் வலி, எழுந்து உட்காருவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
வெந்தயம்
யூரிக் அமில அளவை உணவுக் கட்டுபாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதில் வெந்தயம் முக்கிய இடம் வகிக்கின்றது.
குறிப்பாக உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் தொழிலை வெந்தயம் சிறப்பாக செய்கின்றது. சிறுநீரக செயல்பாட்டுக்கு முக்கியப் பங்கு வகிக்கும் வெந்தயம், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது அதனை கட்டுக்குள் வைக்கின்றது.
யூரிக் அமில பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் வெந்தயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்ததுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |