பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் இப்படி ஒரு பேராபத்து இருக்கின்றதா... ஆண்களே ஜாக்கிரதை!
பப்பாளிப்பழம் ஜீரணிக்க எளிதானது. பலவிதமான நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இது பக்கவிளைவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
பப்பாளி எடுத்துகொள்வது பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் அதிகமாக எடுக்கும் போது, கர்ப்பத்தை அபாயப்படுத்துவது முதல் உணவுக்குழாயை தடுப்பது வரை சமயங்களில் இவை பாதிப்பை உண்டாக்கிவிடலாம்.
கர்ப்பிணிக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுத்தும்
பப்பாளி இலைகளில் பப்பேன் எனப்படும் கூறு உள்ளது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்கள் குழந்தைக்கு நச்சுத்தன்மையளிக்கும். இது பிறப்பு குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது பப்பாளியின் பக்க விளைவுகள் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆகவே, கர்ப்ப காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு பப்பாளிப்பழத்தை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் பப்பாளி விதைகள், வேர்கள் மற்றும் இலைகள் எடுத்துகொள்வது கருவுக்கு தீங்கு விளைவிக்கும்.
என்பதால் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக பழுக்காத பப்பாளி பழத்தில் லேடெக்ஸின், அதிக செறிவு உள்ளது இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும்.
கருவுறுதலை பாதிக்கும்
பப்பாளி விதைகள் கருக்கலைப்பை உண்டாக்கும். பழுக்காத பப்பாளி கருப்பை சுருக்கத்துக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பப்பாளி அதிகம் எடுத்துகொள்வதை தவிர்ப்பது நல்லது.
பப்பாளி விதை சாறு ஆண்களின் கருவுறுதலையும் குறைக்க செய்யலாம். இது விந்தணுக்களின் இயக்கத்தையும் பாதிக்கும்.