யாரும் மகாளய அமாவாசைக்கு மறந்தும் கூட செய்யக்கூடாதவை என்ன தெரியுமா?
மகாளயம் என்றால் ஒன்றாக கூடுவது என்று பொருள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கே மகாளய அமாவாசை என்னும் சிறப்பு உள்ளது.
மகாளய பட்ச நாட்களில் முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமியில் தோன்றி நம் இல்லத்தில் நம் அருகிலேயே இருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது.
காலம் சென்ற நம் முன்னோர்களை அனுதினமும் வழிப்பட்டுக்கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பான நாள் உண்டல்லவா?அது தான் மகாளய பட்சம்.
மகாளய பட்சம் 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பிலவ வருடம் புரட்டாசி 5ஆம் தேதி (செப்டம்பர் 21 ஆம் தேதி) பிரதமையில் ஆரம்பமானது.
இது புரட்டாசி 20 ஆம் தேதி (அக்டோபர் 06) அமாவாசை வரை கடைப்பிடிக்கப்படும். அது தான் மகாளய அமாவாசை.
கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும் தேய்பிறை ஆரம்ப நாளில் இருந்து அடுத்த 15 நாளான அமாவாசை நாளன்று இது முடிவடைகிறது.
"கிருஷ்ண" என்றால் கருப்பு என்று அர்த்தம். முன்னோர்கள் கூடும் இந்த நன்னாட்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவற்றைப் பார்க்கலாம்.
- மது புகை பழக்கம் கூடாது.
- புலால் உண்ணாமையை கடைப்பிடிக்க வேண்டும்.
- குறிப்பாக நாம் சாப்பிடும் உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது.
- கணவன் மனைவிகள் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
- அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து சுத்தமான நீரில் நீராட வேண்டும்.
- எழைகளுக்கு முடிந்த அளவுக்கு பொருளுதவி செய்ய வேண்டும்,பசி என வருபவர்களுக்கு முடிந்த வரையில் சாப்பாடு போடவேண்டும்.
- முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு பூஜை விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். முன்னோர்களை வழிபட்ட பின்பு தான் நாம் சாப்பிட வேண்டும்.
இதையெல்லாம் கடைப்பிடிப்பதால் நமது முன்னோர்கள் நம்மையும் நமது சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள். பித்ரு சாபம் தீரும். உடல் உபாதைகள் நீங்கும்.
என்றென்றும் வீட்டில் செல்வம் கொழித்து மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்பது நமது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த பதினைந்து நாட்களில் குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது தர்ப்பணம் விடுவது சிறப்பு என கூறப்படுகிறது.