லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் அவமானமாகவுள்ளது... ஓப்பனாக பேசிய பிரபல நடிகை!
நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
நயன்தாரா
அவர் நடித்து வரும் திரைப்படங்களில் கூட லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தான் டைட்டில் வெளியாகி வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவமானமாக இருக்கிறது என்று கூறி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாயகிகளில் பெரிய அளவில் கொண்டாடப்படுபவரும் உச்சத்தில் இருப்பவரும் நடிகை நயன்தாரா தான்.
ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் அந்த பெயருக்கு ஏற்றவாறு வெற்றிகளை குவித்து வருகின்றார்.இவரின் படங்கள் வசூல் ரீதியிலும் பட்டையை கிளப்பி வருகின்றது.
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ’அசுரன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகி அதன் பின்னர் ’விடுதலை 2’ ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது லேடி சூப்பர் ஸ்டார் குறித்த கேள்வி எழுப்பபட்டுள்ளது.
இதற்கு மஞ்சு வாரியர், என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தேவையில்லாத விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருதாகவும் அது தனக்கு தனிப்பட்ட ரீதியில் அவமானமாக உள்ளதாகவும் குறிபிட்டுள்ளார்.
இந்த பட்டத்திற்கு என சில வரைமுறைகளை இருக்கின்றது. உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |