Vastu Tips: பணத்தை எண்ணும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரும்
பணம் எண்ணும் போது சில தவறுகளை செய்தால் துரதிர்ஷ்டம் துரத்துவதோடு வறுமையும் சேர்ந்து வருமாம்.
லட்சுமி தேவயின் அருள் ஒருவருக்கு இருந்தால் வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்பதைக் குறித்து கவலைப்பட தேவையே இல்லை. வீட்டில் செல்வம் வளர்வதுடன், பணப்பற்றாக்குறையும் இருக்காது.
வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு பலரும் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வணங்குகின்றார். ஆனால் லட்சுமி தேவி கோபப்பட்டால் பல நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் பணம் தொடர்பான சில தவறுகளை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். அது என்னென்ன தவறுகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பண விடயத்தில் செய்யக்கூடாத தவறுகள்
பணத்தினை எக்காரணம் கொண்டு எச்சில் தொட்டு எண்ணக்கூடாது. அவ்வாறு செய்தால் லட்சுமி தேவியினை அவமானப்படுத்துவதுடன், அவரை கோபத்தில் ஆழ்த்தவும் செய்யும். மேலும் நிதி சிக்கல்களும் ஏற்படும்.
எக்காரணத்தைக் கொண்டு பணத்தினை மடித்து வைக்கக்கூடாது. பர்ஸில் இவ்வாறு வைப்பதையும் தவிர்த்துக் கொள்ளவும். இது லட்சுமி தேவியை அவமானப்படுத்தும்.
அதே போன்று பணத்தினை வீட்டில் எல்லா இடங்களிலும் வைத்திருக்க கூடாது. இது லட்சுமி தேவியை அவமதிப்பதாகும், மேலும் மோசமான விளைவையும் சந்திப்பீர்கள்.
பணத்துடன் வேறு எந்த பொருட்களையும் வைக்கக்கூடாது. உதாரணத்திற்கு பர்ஸில் பணத்துடன் சில பில்களையும் சேர்த்து வைத்திருப்பவர்கள் உடனே இந்த செயலை நிறுத்திவிட வேண்டும்.
அதே போன்று இரவில் தூங்கும் போது பணம் மற்றும் பணப்பையை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் மட்டுமே அதிர்ஷ்டம் தேடிவரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |