உங்கள் குளியலறையில் இந்த பொருட்கள் இருக்கா? கட்டாயம் அப்புறப்படுத்துங்க
பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் உள்ளது போல் குளியல் அறைக்கு என்று சில வாஸ்து முறைமைகள் காணப்படுகின்றன. சில பொருட்கள் குறியல் அறையில் இருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும்.
இவ்வாறான பொருட்கள் உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் அமங்களத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.
ஆனால் இரு குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கும். குளியலறையில் வைக்கக்கூடாத சில பொருட்கள் குறித்தும் இதனால் ஏற்படும் பாதகம் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
குளியலறையில் வைக்க கூடாதவை
ஈரமான துணிகள் அல்லது அழுக்கு படிந்த துணிகளை உங்கள் வீட்டின் குளியல் அறையில் வைக்க கூடாது. இது வாஸ்து தோஷம் ஆகும் மற்றும் சூரிய தோஷத்தையும் ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஈரத்துணிகள் சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமானது என கருதப்படுகின்றது.
அதனால் சனிபகவானின் பார்வை உங்கள் வீட்டின் மேல் திரும்ப இது வழிவகுக்கும். இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.
வெற்று வாளி மற்றும் வாடிப்போன செடிகள் பொதுவாக உங்கள் குளியலறையில் இருக்கும் வாளிகளை எப்போதும் சிறிதளவு நீரோடு வைத்திருப்பது நல்லது. வெற்று வாளியை வைத்திருப்பது பணப்பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமையும். உடைந்த வாளியை வீட்டில் வைத்திருப்பதும் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும்.
சிலர் குளியல் அறைக்குள் செடிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வளர்ப்பது நல்லது தான் என்றாலும், வாடிப்போன அல்லது உலர்ந்து போன செடிகளை வைக்க கூடாது, அது பெரும் துரதிஷ்டத்தை வீட்டுக்குள் கொண்டு வரும் மேலும் பண கஷ்டத்தை ஏற்படுத்தும்.
குளியலறைக்குள் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைப்பது பெரும் துரதிஷ்டத்தை அழைத்து வரும். குளியலறை மட்டுமல்ல, வீட்டில் எந்த இடத்திலும் முகம் தெளிவாக தெரியாத அல்லது உடைந்த கண்ணாடிகளை வைப்பது எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும். உடைந்த கண்ணாடியில் அதிகளவு எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துபடி பழுதான தண்ணீர் குழாய் பழுதடைந்த மற்றும் உடைந்த தண்ணீர் குழாய்களை குளியலறைக்குள் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
சில இடங்களில் எவ்வளவு தான் குழாயை மூடினாலும் தண்ணீர் சொட்டு சொட்டாக அல்லது தொடர்ந்து ஒழுகிக் கொண்டே இருக்கும். இதுவும் ஒரு எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும் திறன் கொண்டது.
ஆகையால் பழுதடைந்த குழாய்களை உங்கள் குளியறைக்குள் மட்டுமல்லாமல் வீட்டில் எந்த பகுதியிலும் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
இவ்வாறான பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்யும் இதனால் உங்கள் உடல் நலம் மற்றும் மனநலம் வலுவாக பாதிக்கப்படும். இவ்வாறான பொருட்களை உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |