பாகற்காய் சாப்பிட போறீங்களா?அப்போ இந்த பொருட்களை மறந்தும் தொடாதீங்க- விஷமாக மாறும்
பொதுவாக பாகற்காய் என்றாலே “எனக்கு பிடிக்காது” என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.
ஏனென்றால் பாகற்காயில் இருக்கும் கசப்பு சுவை பெரும்பாலானோருக்கு பிடிக்காமல் இருக்கும்.
மாறாக பாகற்காய் கசப்பாக இருந்தாலும் அதில் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக நீரழிவு நோயாளர்கள் பாகற்காய் சாப்பிட்டால் அவர்களின் உடலுக்கு நல்லது எனக் கூறப்படுகிறது.
எவ்வளவு நன்மைகள் பாகற்காயில் இருந்தாலும் அதனை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
அந்த வகையில் பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத பொருட்கள்
1. முள்ளங்கி சாம்பார் செய்து சாப்பிட்ட பின்னர் பாகற்காய் வறுவல் சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.ஆனால் இவை வயிற்றில் வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்கும்.
2. முள்ளங்கி சேர்க்கப்பட்ட உணவுகளுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிடக் கூடாது. இப்படி சாப்பிடும் பட்சத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வாந்தி, தலைசுற்றல், மந்தம் மற்றும் குமட்டல் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
3. மதியம் பாகற்காய் சாப்பிடுகின்றார்கள் என்றால் அவர்கள் சரியாக 1 மணி நேரத்திற்கு முன்பு வரையிலும் பால் குடிக்கக் கூடாது. பாகற்காயுடன் பால் பொருட்கள் சேர்த்து சாப்பிடக் கூடாது.
4. பாகற்காய் சமைக்கும் பொழுது அதனுடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற வலுவான மசாலாப் பொருட்களை சேர்க்க கூடாது. ஏனென்றால், மசாலாப் பொருட்களில் இருக்கும் காரம் பாகற்காயின் சுவையை மாற்றும். அதில் சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற லேசான மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம்.
5. கோடைக்காலங்களில் மாம்பழங்கள் வீட்டில் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். இப்படியான நேரங்களில் பாகற்காயுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிடும் பட்சத்தில் வயிற்று வலி, டயேரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
6. மட்டன் சமைக்கும் போது சில காய்கறிகள் குழம்புடன் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தவறியும் பாகற்காய் சேர்த்து கொள்ளக் கூடாது. அத்துடன் பாகற்காய் சம்பல் சாப்பிடும் போது இறைச்சி வகைகள் சாப்பிடவும் கூடாது. இந்த சேர்க்கை செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |