நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆபத்து? ஏன் தெரியுமா? எச்சரிக்கை
நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நாவல் பழம் ஆரோக்கியம் குறைவில்லாத பழம்.
ஆனால் இதை தவறான வழியில் எடுத்துகொள்வது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம்.
இதை சாப்பிட்ட பின் செய்யகூடாத விஷயங்கள் உண்டு அது என்ன என்பதை பார்க்கலாம்.

நாவல் பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது?
நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
ஏனெனில் இதன் புளிப்பு சுவை அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
வயிற்று வலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நாவல் பழம் செரிமானத்துக்கு உதவுகிறது.
அதனால் உணவு உண்ட பிறகு அதை எடுத்துகொள்வது தான் நல்லது.
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு மஞ்சள் சேர்த்த உணவு தவிர்க்க வேண்டும்
நாவல் பழம் சாப்பிட்ட உடனே மஞ்சள் சேர்த்த உணவை தவிர்க்க வேண்டும்.
நாவல் பழமும் மஞ்சளும் இணைந்து வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.
இது உடலில் வினைபுரிந்து எரிச்சலை உண்டு செய்யும். அதனால் நாவல் பழம் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் கலந்த எந்த உணவையும் தவிர்க்க வேண்டும்.

நாவல் பழம் சாப்பிட்ட உடன் பால் குடிக்கலாமா?
நாவல் பழம் சாப்பிட்ட உடன் பால் குடிக்க கூடாது.
ஏனெனில் இது வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது.
நாவல் பழம் சாப்பிட்ட 1 மணி நேரம் வரை பால், பால் கலந்த திரவங்கள் என்று எதையும் குடிக்க கூடாது.

நாவல் பழம் சாப்பிட்ட உடன் ஊறுகாய் சேர்க்கலாமா?
பெரும்பாலான மக்கள் உணவில் ஊறுகாய் சேர்ப்பதை விரும்புகிறார்கள்.
ஆனால் நாவல் பழம் ஊறுகாயுடன் மோசமாக வினைபுரிந்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
கடினமாக இருக்கலாம். நாவல் பழம் மட்டும் அல்ல எல்லா உணவுகளையும் சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துகொண்டால் மட்டுமே அதன் மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும்.