டொனால்ட் டிரம்ப்பிற்கு இருக்கும் ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு உங்களுக்கு வருவதை எப்படி தடுக்கலாம்?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு (CVI) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் இது கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் சாதாரண நோயாகும். ஆரம்பத்தில் அறிகுறிகள் தெளிவாக இல்லாத காரணத்ததால், பெரும்பாலானவர்கள் அதை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.
இதனானால் இந்த நோயின் பாதிப்பில் பலர் சிக்கிகுகின்றனர். இந்த பதிவில் அதை பற்றிய ஒரு விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கம் (CVI) என்பது என்ன?
நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கம் (Chronic Venous Insufficiency – CVI) என்பது, கால்களில் உள்ள நரம்புகள் இதயத்துக்கு ரத்தத்தை சரியாக அனுப்ப முடியாத நிலையாகும்.
நரம்புகளுக்குள் ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் வால்வுகள் பலவீனமாவதோ அல்லது சேதமடைவதோ இதற்கு காரணமாகிறது. இதனால் ரத்தம் கால்களில் தேங்கி நிற்கும்.
“இந்த நிலைக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால் வீக்கம், வலி, தோலில் மாற்றம் மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்கள் போன்ற பல சிக்கல்கள் ஏற்படலாம்” என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அறிகுறிகள்
- கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம்
- வலி, இறுக்கம், அரிப்பு, கூச்சம்
- தோலில் மாற்றங்கள் (பழுப்பு நிறம்
- தடிப்பான தோல்) காயங்கள்
- புண்கள் உருவாகல் "சார்லி ஹார்ஸ்" எனப்படும் தசைப்பிடிப்பு வலி இவை நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
பாதிப்புக்கான காரணிகள்
- வயது முதிர்வு
- உடல் பருமன்
- மரபியல் தாக்கம்
- நீண்ட நேரம் நின்றோ அல்லது அமர்ந்தோ இருப்பது
- உடற்பயிற்சி இல்லாமை
- புகைபிடிப்பு
எப்போது மருத்துவ ஆலோசனை தேவை?
தொடர்ச்சியான வீக்கம், தோல் மாற்றம், வலி போன்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவரை அணுகுவது முக்கியம். ஆரம்ப நிலையில் இது கண்டறியப்பட்டால், சிக்கலான விளைவுகளைத் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறைகள்
- வாழ்க்கை முறை மாற்றங்கள் (பயிற்சி, சத்தான உணவு)
- மருந்துகள்
- குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சைகள்
நரம்புகளின் செயல்பாடு குறைவடைந்தால், அதன் தாக்கம் வாழ்நாளில் பெரிதும் ஏற்படக்கூடும். ஆனால், விழிப்புணர்வும் முறையான சிகிச்சையும் இருந்தால், நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கத்தை (CVI) கட்டுப்படுத்த முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
