பல நூறு வருடங்கள் பழைமையான நெடுந்தீவு பெருக்க மரம்!
நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவை கொண்ட மரமாகும். இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது.
இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன.
இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது.
இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது. இது தொடர்பான பல சுவாரஸ்யமான விடயங்களையும் இம்மரத்தின் சிறப்பம்சங்களையும் முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
