மீதமான இட்லியில் இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி? வெறும் 5 நிமிடம் போதும்
மீதமான இட்லியை தூக்கி போடாமல் அதில் இட்லி மஞ்சூரியன் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய மாநிலம் தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை தான் மக்கள் சாப்பிடுகின்றனர். இதற்காக விதவிதமான சட்னி மற்றும் சாம்பார் வைப்பது வழக்கம்.
இவை ஆரோக்கிய உணவாக கருதப்படுவதுடன், சுவையாகவும் இருப்பதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு நாம் காலை உணவிற்கு செய்யும் இட்லி சில நேரங்களில் மீதம் ஏற்பட்டுவிடலாம். அதனை அப்படியே தூக்கி குப்பையில் போட்டுவிடாமல் இட்லி மஞ்சூரியன் செய்யலாம். அதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இட்லி - 10
பெரியவெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
வெங்காய தாள் - சிறிதளவு (பொடியாக வெட்டியது)
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கார்ன் மாவு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ் இவற்றினை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய பின்பு பொரித்து வைத்திருக்கும் இட்லியையும் சேர்க்க வேண்டும். பின்பு சோள மாவினை சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி, நன்றாக கிளறவும்.
கடைசியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாள், மல்லி இலை இவற்றினை தூவி இறக்கினால் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |