Viral Video: இப்படியுமா மீன் குழம்பு வைப்பாங்க? 9 மில்லியன் பேர் பார்த்த பெண்ணின் சமையல்
பெண் ஒருவர் வைக்கும் மீன் குழம்பினை 9 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவதானித்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பெண்ணின் மீன் குழம்பு
பொதுவாக அசைவ பிரியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் உணவு என்றால் மீன் ஆகும். மீனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுவார்கள்.
அதன் மணம், சுவை இவற்றிற்கு ஈடாக வேறு எந்த உணவும் வரமுடியாது. அந்த அளவிற்கு அசத்தலான சுவையைக் கொண்டுள்ளது.
இங்கு பெண் ஒருவர் வைக்கும் மீன் குழம்பினை ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
அப்படியென்ன இருக்கின்றது இந்த குழம்பில் என்று யோசிக்கிறீர்களா?... ஆம் பெண் குழம்பில் மீனைக் கொட்டியதும், அது பயங்கரமாக துடிதுடித்துள்ளது. இதை அவதானித்த பார்வையாளர்கள் இப்படியெல்லாமா மீன் குழம்பு வைப்பாங்க? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
😭😭😭 pic.twitter.com/Pb9eWQzXjO
— Duta (@mineralaif) August 1, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |