இதை யாருக்கும் தானமாக கொடுக்காவும், வாங்கவும் செய்யாதீங்க! துரதிர்ஷ்டம் துரத்துமாம்
நமது வாழ்க்கையில் சாஸ்திர சம்பிரதாயங்கள் என்பதை பலரும் கடைபிடித்து வருகின்றனர். சில மக்கள் இதனை உணர்வுப்பூர்வமாக அனுபவம் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நம் வாழ்வில் தானம் கொடுப்பதும், இனமாக பொருட்களை வாங்குவது சிலர் வழக்கமாக வைத்துள்ள நிலையில், அவ்வாறு வாங்கக்கூடாது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
உழைக்காமல் நம் கைக்கு வரக்கூடிய பொருள் நமக்கு சொந்தமில்லை. அதன்மூலம் நமக்கு லாபம் வருகிறதோ இல்லையோ, நிச்சயமாக நஷ்டம் வரும்.
எனவே, உழைக்காமல் சம்பாதித்த காசு, இனமாக வரும் பொருள், எதுவாக இருந்தாலும் முதலில் அதை வேண்டாம் என்று சொல்லி, நிராகரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
காசு கொடுக்காமல் கிடைக்கின்றது என்பதற்காக, எது கிடைத்தாலும் வாங்கி வீட்டிற்குள் வைத்துக் கொள்பவர்களுக்கு கஷ்டமும் இனாமாக வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எதையெல்லாம் தானமாக வாங்கக்கூடாது?
எவர்சில்வர் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை யாரிடமும் இனாமாக வாங்கக்கூடாது.
இந்த பொருட்களை மற்றவர் கையில் இருந்து பெற்றுக் கொண்டால், தானம் கொடுத்தவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டமும், துரதிஷ்டமும் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் என்ற ஒரு கருத்து உண்டு.
உங்களுடைய வீட்டு விசேஷங்களில் உங்கள் வீட்டு சுப காரியங்களில், எவர்சில்வர் பாத்திரத்தை அன்பளிப்பாக கொடுப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.
மாறாக நீங்கள் விசேஷங்கள் சுபநிகழ்ச்சிகள் என்றாலே வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் மட்டை தேங்காயை தானமாக கொடுப்பது நல்லது. இதனால் வாழ்வில் உங்களுக்கு வளம் கூடும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
அதேபோன்று, இரும்பு சம்பந்தப்பட்ட கத்தி, அருவாமனை, காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் எந்திரங்களை பரிசாகவும், தானமாகவும் கொடுக்கக்கூடாது. தானமாகவும் பெறக்கூடாது.
